sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கெஜ்ரிவால் கைது ; தலைவர்கள் கண்டனம்

/

கெஜ்ரிவால் கைது ; தலைவர்கள் கண்டனம்

கெஜ்ரிவால் கைது ; தலைவர்கள் கண்டனம்

கெஜ்ரிவால் கைது ; தலைவர்கள் கண்டனம்

2


UPDATED : மார் 21, 2024 10:35 PM

ADDED : மார் 21, 2024 10:30 PM

Google News

UPDATED : மார் 21, 2024 10:35 PM ADDED : மார் 21, 2024 10:30 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு புகுந்து அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

* காங். எம்.பி.ராகுல் கூறியது, கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் ஒரு இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறது பா.ஜ.,

* முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை, தேர்தல் தோல்வி பயத்தால் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது பா.ஜ., எதிர்கட்சி தலைவர்களை தொடர்ந்து இடைவிடாது துன்புறுத்தி வருகிறது பா.ஜ. அரசு.

* காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது, எதிர்க்கட்சி தலைவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.,

* சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் கூறியது, எதிர்க்கட்சிகளை பொதுமக்களிடமிருந்து விலக்கி வைகக பா.ஜ., முயல்கிறது.

* விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியது, தோல்வி பயம் காரணமாகவே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இண்டியா கூட்டணி தலைவர்களை மிரட்டப்பார்க்கிறது பா.ஜ.,

* காங்.., கட்சியின் பிரியங்கா கூறியது, கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறது பா.ஜ.,

* கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து ஆம் ஆத்மி அமைச்சர் ஆதிஷி கூறியது, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும், சிறையிலிருந்தவாறே முதல்வராக தொடர்வார். சிறையிலிருந்தே ஆட்சி செய்வார் என்றார்.






      Dinamalar
      Follow us