ADDED : நவ 01, 2024 04:58 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி தலைவர் ஜோஸ்பின் மேரி, 67. இவரது கணவர் முன்னாள் ராணுவ வீரர் அருள்ராஜ், 71. இவர் அதே ஊராட்சியின் முன்னாள் தலைவர். இங்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக குமார், 43, என்பவர் பணிபுரிந்தார். காளையார்கோவில் எஸ்.எஸ்., நகர் காளீஸ்வரன் என்பவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு வரி ரசீது கோரி, ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அதற்கு ஊராட்சி தலைவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பணத்தை தருவதாக கூறிய காளீஸ்வரனை சில நாட்களுக்கு முன் ஊராட்சி அலுவலகம் வருமாறு அழைத்தார். அங்கிருந்த அருள்ராஜ் மற்றும் குமாரிடம் 5000 ரூபாயை காளீஸ்வரன் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அருள்ராஜ் மற்றும் குமாரை கைது செய்தனர்.
பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோஸ்பின் மேரியையும் கைது செய்தனர். அவர் உட்பட மூன்று பேரும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரணையை ஒத்தி வைத்தார்.

