தன் வீட்டு பெண்கள் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
தன் வீட்டு பெண்கள் படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் கைது
ADDED : ஜன 29, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ், 26. இவர் தன் குடும்பப் பெண்களின் படங்களை செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷிடம் புகார் செய்தனர். 'சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், விக்னேஷ் தன் சமூக வலைதள கணக்கில் இருந்து படங்களை, 'அப்டேட்' செய்தது உறுதியானது. அவரை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.பி., கூறுகையில், ''சமூக வலைதளத்தில் 'ஆக்டிவ்' ஆக இருக்கும் பெண்கள், தங்கள் விபரங்கள், படங்களை வேறு யாரும் எளிதில் பயன்படுத்தாத வகையில் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.