ADDED : அக் 09, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூரில் 41 பேர் நெரிசலில் சிக்கி இறந்து போன சம்பவத்தில், நடிகர் விஜய் மீது வழக்கு போடுவது சரியானது அல்ல. விஜயை கைது செய்தால், மோசமான அரசியல் பின்விளைவை ஏற்படுத்தும்.
தமிழக முதல்வர் அந்த நிலைக்கு செல்ல மாட்டார். த.வெ.க., கூட்டம் நடத்த, வேலுச்சாமிபுரத்தை எப்படி போலீசார் அனுமதித்தனர் என தெரியவில்லை. த.வெ.க.,வே வற்புறுத்திக் கேட்டிருந்தாலும், 'அந்த இடத்தில் நெருக்கடி ஏற்படும்' என போலீசார் சொல்லியிருக்க வேண்டும். அதைக்காட்டி, அந்த இடத்துக்கு அனுமதி கொடுக்காமல் மறுத்திருக்க வேண்டும். கரூரில் சம்பவம் நடந்த இடம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடமில்லை. விபத்து நடந்த பின், காப்பாற்றும் முயற்சியை தான் செந்தில் பாலாஜி செய்துள்ளார். - அழகிரி, முன்னாள் தலைவர், தமிழக காங்.,