தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்

நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்

நேற்று போக்சோ குற்றங்களில் கைதானவர்கள்


ADDED : மே 29, 2025 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2025 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொழிலாளி சிக்கினார்


வேலுார்: வேலுார், ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன், 35; திருமணமானவர். இவர், 16 வயது, பிளஸ் 1 மாணவியிடம், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வேலுார் மகளிர் போலீசார், கூலித்தொழிலாளி மணிகண்டனை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.

சிறுமியை மணந்தவருக்கு 'காப்பு'


ஈரோடு: ஈரோடு, சங்கு நகர் முதல் வீதியை சேர்ந்த சையது முஸ்தபா மகன் சைமு, 24; கூலித் தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியை அவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ள சிறுமி, மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிறுமி வயதை அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஈரோடு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சைமு, அவரது தந்தை சையது முஸ்தபா, 50, தாய் பாத்திமா, 40 சிறுமியின் தாய், தந்தை என ஐந்து பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஓய்வு அதிகாரிக்கு '10 ஆண்டு'


சிவகங்கை: சிவகங்கை அரசு அலுவலர்கள் குடியிருப்பில் வசிப்பவர் ராஜ்குமார், 62. இவர், 2018ல் சிவகங்கையில் உள்ள கிளை கருவூலக அதிகாரியாக பணிபுரிந்தார். தாய் பராமரிப்பில் இருந்த 13 வயது சிறுமிக்கு தேவையான உதவிகளை இவர் செய்தார். அதை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிவகங்கை மகளிர் போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர். வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, சிறுமிக்கு அரசு, 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us