ADDED : ஜன 30, 2026 06:48 AM
சென்னை: பச்சை பட்டாணியில் செயற்கை நிறமிகள் சேர்ப்பது அதிகரித்து வருவது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
பச் சை பட்டாணியை சாப்பிடுவதால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், வாங்கும் பச்சை பட்டாணியின் நிறத்தை வைத்தே, அதில் செயற்கை நிறமி ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
பச்சை பட்டாணியை தண்ணீரில் போட்டு, சில நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். உடனடியாக தண்ணீரும் பச்சை நிறத்தில் மாறியிருந்தால், அது செயற்கை ரசாயனம் கலந்தது என தெரிந்து கொள்ளலாம்.
அதேநேரம், தண்ணீர் நிறம் மாறாமல் இருந்தால், அது சாப்பிட தகுந்த பச்சை பட்டாணி.
இதுபோன்ற செயற்கை ரசாயனங்கள் கலந்த பச்சை பட்டாணியை சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது, அபராதம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

