தமிழக தேர்தல் நெருங்குவதால் ரயில்வே தாராளம்: மூன்று புதிய ரயில்களின் சேவை நாளை துவக்கம்
தமிழக தேர்தல் நெருங்குவதால் ரயில்வே தாராளம்: மூன்று புதிய ரயில்களின் சேவை நாளை துவக்கம்
UPDATED : ஜன 22, 2026 05:41 AM
ADDED : ஜன 22, 2026 12:22 AM

சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேலும் மூன்று அம்ரித் பாரத் ரயில் களின் சேவையை, பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகள் கூட் டணியை இறுதி செய் வதில் தீவிரம் காட்டி வருகின் றன. தேர்தல் காரணமாக, ரயில்வே அமைச்சகமும், தமிழகம் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
புதிய ரயில்கள் இயக்கம், மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு போன்றவை அரங்கேறி வருகின்றன.
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில்; நியூ ஜல்பைகுரி - திருச்சி, தாம்பரம் - சந்திர காச்சி இடையே, அம்ரித் பாரத் ரயில்களின் சேவை, கடந்த, 17ம் தேதி துவக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் மூன்று அம்ரித் பாரத் ரயில்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
அதாவது, தாம்பரத்தில் இருந்து புறப்படும் அம்ரித் பாரத் ரயில், விழுப்புரம், திருச்சி, துாத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி வழியாக, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும்.
இதேபோல, நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அம்ரித் பாரத் ரயில், கர்நாடகா மாநிலம் மங்க ளூருக்கும், திருவனந்தபுரத் தில் இருந்து புறப்படும் அம்ரித் பாரத் ரயில், கோவை, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக தெலுங்கானா மாநிலம் சர்வபள்ளிக்கு செல்லும்.
நாகர்கோவில் - மங்களூரு இடையேயான அம்ரித் பாரத் விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து செவ்வாய் கிழமையன்று, காலை, 11:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மங் களூரு - நாகர்கோவில் அம்ரித் பாரத் விரைவு ரயில், புதன் கிழமையன்று காலை, 8:00 மணிக்கு, மங்களூரிலிருந்து புறப்பட்டு அன்றிரவு, 10:05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இந்த ரயில்களை பிரதமர் மோடி நாளை, திருவனந்த பு ரத்தில் நடக்கும் விழாவில், துவக்கி வைக்கிறார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாளை முதல் இயக்கப் படும் மூன்று அம்ரித் பாரத் ரயில்களும், எந்தெந்த நாட் களில் இயக்கப்படும், கட்டணம் எவ்வளவு மற்றும் நிறுத்தங்கள் குறித்த விபரங்கள், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கர்நாடகா மாநிலம் எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை பெரம்பூர் வழி யாக, மேற்கு வங்க மாநிலம் பாலுார்காட் செல்லும், புதிய வாராந்திர ரயில் சேவை நேற்று துவக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் புதன்கிழமை காலை 10:15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாம் நாள் அதிகாலை 4:15 மணிக்கு பாலுார்காட் செல்லும்.
மறு மார்க்கமாக, அங்கிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை காலை 5:15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த மூன்றாம் நாள் அதிகாலை 3:00 மணிக்கு, எஸ்.எம்.வி.டி. பெங்களூருக்கு செல்லும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

