ADDED : மே 11, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகளுக்கு பற்கள் சொத்தை ஏற்படாமல் தடுப்பது எப்படி.
தினேஷ், தேனி.
குழந்தைகளுக்கு தினமும் காலை, இரவு பல் துலக்குவதை பழக்கப்படுத்த வேண்டும். சாக்லேட், இனிப்புகள் சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது. இனிப்புகள் பற்களுக்கு இடையே சிக்கிக்கொண்டால் சுத்தம் செய்ய வேண்டும். இது பற்சொத்தை ஏற்படுவதை தடுக்கும். குழந்தைகளுக்கு 6 வயதிற்கு மேல் பற்கள் விழுந்து முளைக்கும். அந்த காலகட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்தால் பல் வரிசை சீராக வளரும்.
டாக்டர் பாஸ்கரன், பல்மருத்துவர், அரண்மனை புதுார், தேனி.