ADDED : பிப் 13, 2024 04:18 AM
சென்னை : சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம், நேற்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று சட்டசபையில் இரங்கல் குறிப்புகள் மற்றும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் துவங்கும்; நாளையும் தொடரும்.
நாளை மறுதினம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பதிலுரை மட்டும் இருக்கும். முதல்வர் பதில் அளிப்பார்; அத்துடன் கூட்டம் முடியும்.
மீண்டும் சட்டசபை 19ம் தேதி கூடும். அன்று, 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்; அடுத்த நாள், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மறுநாள், 21ம் தேதி காலை மற்றும் மாலை, பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடக்கும்.
வரும் 22ம் தேதி, அமைச்சர்கள் பதிலுரை, சட்ட முன்வடிவுகள் அறிமுகம், ஆய்வு மற்றும் நிறை வேற்றுதல் நடைபெறும். அத்துடன் தொடர் நிறைவடையும்.