சட்டசபை தேர்தல் தி.மு.க.,வுக்கு சுலபமாக இருக்காது: தமிழிசை
சட்டசபை தேர்தல் தி.மு.க.,வுக்கு சுலபமாக இருக்காது: தமிழிசை
ADDED : அக் 24, 2024 10:01 PM
சென்னை:''வரும் சட்டசபை தேர்தல், தி.மு.க.,வுக்கு சுலபமாக இருக்காது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும்,'' என, முன்னாள் கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
கவர்னரின் பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் பரவாயில்லை. ஆனால், பட்டமளிப்பு விழாவை, உயர் கல்வித் துறை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அரசியலையும் கல்வியையும் கலப்பது, தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. புதிய கல்விக் கொள்கை, துணைவேந்தவர்கள் நியமனம், பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு என, அனைத்தையும் அரசியலாக்கி வருகின்றனர்.
தமிழக அரசில் எதுவும் சரியாக நடப்பதில்லை. முதல்வர், துணை முதல்வர், தங்களை தோற்கடிக்க ஆளில்லை என்ற ஆணவத்துடன் பேசுகின்றனர். தி.மு.க., கூட்டணியில் விரிசல் இல்லை என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும், காங்கிரஸ், வி.சி., உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. வரும், 2026 சட்டசபை தேர்தல், தி.மு.க., நினைக்கும் அளவிற்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. வரும் 2026 தேர்தலுக்குப் பின், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும். தற்போதைய அரசியல் கள நிலவரத்தை வைத்துத்தான் சொல்கிறேன். கண்டிப்பாக இது தான் நடக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.