உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 08, 2026 03:17 AM
அ நிறம் | அளவு
சட்டசபை நேரலையை, சைகை மொழியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுப்பதாக, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று பேசிய அ.தி.மு.க., - காமராஜ், ''பேச்சு மற்றும் செவித்திறன் பாதித்த, மாற்றுத் திறனாளிகளும் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில், மொழி பெயர்க்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான எழுத்து வடிவில் புரிந்து கொள்ளவும், நடவடிக்கை தேவை,'' என வலியுறுத்தினார் .
அதற்கு பதிலளித்த சபாநாயகர் பிரபாகர், ''சட்டசபை நேரலையை, சைகை மொழியில் மொழி பெயர்ப்பது குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தெரிவித்தார்.
