சட்டசபை நடவடிக்கைகள்; 28 நாட்களில் நேரில் பார்த்த 32,055 பார்வையாளர்கள்
சட்டசபை நடவடிக்கைகள்; 28 நாட்களில் நேரில் பார்த்த 32,055 பார்வையாளர்கள்
ADDED : செப் 08, 2026 09:52 PM

சென்னை; தமிழக சட்டசபை நடவடிக்கைகளை காண 28 நாட்களில் 32,055 பேர் பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது:
சிறு வயதில் சட்டசபையை பார்வையிட விருப்பப்பட்டு, பார்வையாளர் மாடம் அருகே வரை வந்து விட்டேன். கதவை திறங்கள் சிறிது பார்த்து விட்டு செல்கிறேன் என்றேன். அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்க முடியாது என்றனர். அன்று, இந்த சபையை நானும் வழிநடத்துவேன் என்றேன்; அது நடந்து விட்டது.
சட்டசபை நடவடிக்கையை, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து, 2021ல் ஆண்டு முழுதும் 22,651 பார்வையாளர்கள் பார்த்தனர். அதேபோல், 2023ம் ஆண்டில் 20,137; 2024ம் ஆண்டில் 10,754; 2025ம் ஆண்டில் 20,123 பேர் பார்த்தனர்.
தற்போது, சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த, 28 நாட்களில், 32,055 பேர் மாடத்தில் இருந்து சபை நடவடிக்கைகளை பார்த்துள்ளனர்.
இதற்கு முன், 20 பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தான் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை, 76 பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். அத்துடன், நேரலையில் இளைஞர்கள் பெரும்பாலும் சட்டசபை நடவடிக்கைளை பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
