உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஜனவரி 1 முதல் அமல்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஜனவரி 1 முதல் அமல்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
ADDED : ஜன 10, 2026 04:21 PM

சென்னை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில்,புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஜன.3ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்று போராட்டத்தை தொடர்ந்தனர். இந் நிலையில், உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை ஜனவரி 6 ஆம் தேதி ஒப்புதல் வழங்கி உள்ளது.
அதனை தொடர்ந்து, தமிழக அரசு, இன்று (ஜனவரி 10) உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை வெளியீட்டில் இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முன்தேதியிட்டு குறிப்பிட்டுள்ளது.

