ADDED : ஆக 29, 2011 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை நகரில், நள்ளிரவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 665 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகரை அமைதியான நகராக மாற்ற, போலீசார் அனைத்து வழிகளிலும் முயன்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை நகர் முழுவதும் நடந்த அதிரடி சோதனையில், போலீசார், பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், 665 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பழைய குற்றவாளிகள், 15 பேரும் அடங்குவர். தவிர, வாகன சோதனையில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய, 83 பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.