UPDATED : டிச 11, 2025 11:07 PM
ADDED : டிச 11, 2025 08:36 PM

சென்னை:கடலுார் மாவட்டம், ம.ஆதனுார் கிராமத்தில் உள்ள, நந்தனார் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது.
கடலுார் மாவட்டம், காட்டு மன்னார்கோயில் அருகில் உள்ள,
ம.ஆதனுார் கிராமத்தில், நாயன்மார்களுள் ஒருவரான நந்நதனாருக்கு, தனி சன்னதியுடன் கூடிய, சவுந்தரநாயகி அம்பிகா சமேத ஸ்ரீசிவலோக நாதர் கோவில்
அமைந்துள்ளது.
ஊர் பொது மக்கள், சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஒத்துழைப்புடன், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி, சங்கராச்சார்ய ஸ்வாமிகள் முன்னெடுப்பில், கோவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிேஷகம், காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில்,கடந்த 10ம் தேதிவெகு விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தில், நந்தனார் ஆன்மிக மகளிர் மன்றம் மற்றும் பண்பாட்டு மையம், காஞ்சி காமகோடி பீடத்தின் சமய சமுதாய கலாசார சேவை அமைப்பான இந்து சமய மன்றம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசி வழங்கினார். பக்தர்களுக்கு நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

