உள்ளடக்கத்திற்கு செல்ல

கோவில் அறங்காவலர்களாக நாத்திகர்களை நியமிக்க கூடாது
கோவில் அறங்காவலர்களாக நாத்திகர்களை நியமிக்க கூடாது
ADDED : ஜூன் 15, 2026 07:51 AM

அ நிறம் | அளவு
அறநிலையத்துறையின் கீழ் உள்ள, 214 கோவில்களில் பரம்பரை வழி சாரா அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலின் அறங்காவலர் என்பவர் திருப்பணிகள், நிதிநிலை, அடிப்படை வசதிகளை முறையாக கவனிப்பவராக இருக்க வேண்டும். ஆனால், பல கோவில்களில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
எனவே, எந்தவித பாகுபாடும் இல்லாமல், லஞ்சத்தை புறந்தள்ளி அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். நாத்திகவாதிகள், குற்றப்பின்னணி கொண்டவர்கள் போன்றோரை நிச்சயமாக நியமிக்கக்கூடாது. கோவில்கள் என்பது கலாசார மையம். கலாசார மரபுகளை உணர்ந்தவர்கள், சமுதாய சேவை பணியில் ஈடுபடுபவர்களையே அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்.
- காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி
