ADDED : மே 17, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், 1901ல் தொடங்கப்பட்ட கிளைச்சிறை, பிப்., 28ல் மூடப்பட்டது. இங்கிருந்த கைதிகள், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
சேலம் சிறை எஸ்.பி., வினோத் கூறுகையில், ''திருச்சியில் இலங்கை தமிழருக்கு தனிச்சிறை உள்ளது. சென்னை புழல் சிறையில், 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் வங்கதேச கைதிகள் உள்ளனர்.
''இதனால், வங்கதேச கைதிகளை மட்டும் ஆத்துார் மாவட்ட சிறையில் அடைக்க, தமிழக சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இச்சிறை, வங்கதேச சிறப்பு சிறை முகாமாக மாற்றப்பட உள்ளது,'' என்றார்.