டாக்டர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது: கவர்னர் ரவி கண்டனம்
டாக்டர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது: கவர்னர் ரவி கண்டனம்
UPDATED : நவ 13, 2024 09:53 PM
ADDED : நவ 13, 2024 09:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையில் டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கவர்னர் ரவி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:டாக்டர் பாலாஜி மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. டாக்டர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. டாக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் ரவி கூறியுள்ளார்.