உ.பி.,யில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நடைபயணம் மேற்கொண்ட பெண் துறவி மீது தாக்குதல்
உ.பி.,யில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நடைபயணம் மேற்கொண்ட பெண் துறவி மீது தாக்குதல்
UPDATED : மார் 10, 2024 08:03 AM
ADDED : மார் 09, 2024 12:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : உ.பி., மாநிலம் அயோத்தியில் இருந்து நடை பயணமாக வந்த ஷிப்ரா பதக்(38) மற்றும் அவரது தந்தை சகோதரர் ஆகியோர் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வந்தனர். சிவராத்திரி என்பதால் சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு தங்கி விட்டு காலை பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி இடையே சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத 8 நபர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது காரின் இடது பக்க கண்ணாடி மற்றும் வாகனத்தில் கட்டியிருந்த ராமர் கொடியை உடைத்து சேதப்படுத்தி சென்றுவிட்டனர். இது குறித்து சிப்ரா பதக் பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் சிப்ரா பதக் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

