தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி

மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி

மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சையில், மணல் கடத்தலை தடுக்க முயன்ற எஸ்.ஐ., முத்துவேல், 46, மீது, டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் அருகே கோடுகிழி பகுதியில், ஆற்று மணல் கடத்தப்படுவதாக, மெலட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, மெலட்டூர் எஸ்.எஸ்.ஐ., முத்துவேல், ஏட்டு ராமன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கோடுகிழி பாலம் அருகே போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த நிலையில், டிராக்டரில் மணல் அள்ளி வந்த நபர், முத்துவேல் மீது டிராக்டரை ஏற்றி விட்டு தப்பி சென்றார். இதில், முத்துவேலுக்கு இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. அவர், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மெலட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us