உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 16, 2026 08:45 AM

அ நிறம் | அளவு
சண்முகத்தை சமரசம் செய்யும் முயற்சியாக, முன்னாள் அமைச்சர் உதயகுமார் வாயிலாக அறிக்கை வெளியிட செய்துள்ளார் பழனிசாமி.
அதன்படி உதயகுமார் வெளியிட்ட அறிக்கை: கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயங்களை பொதுவெளியில் விவாதிப்பது, ஆரோக்கியமான அரசியலாக அமையாது. திட்டமிட்டு அ.தி.மு.க.,வை சிதைக்க நினைக்கும் முதல்வர் விஜயின் அரசியல் அநாகரிகத்தை தடுக்க வேண்டும்.
இந்த நேரத்தில், மூத்த தலைவரான தாங்களே கண்ணியமின்றி பொதுவெளியில் விவாதிக்கலாமா? இது குற்றச்சாட்டு அல்ல; தொண்டனின் மனக்குமுறல். விஜய் ஆட்சி குறித்து, மக்களுக்கு நிழல் எது, நிஜம் எது என்று தெரிய வருகிறது. பழனிசாமி தலைமையில் புதிய சரித்திரம் படைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
