sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டைய கணக்காளர் கோவையில் மாநாடு

/

பட்டைய கணக்காளர் கோவையில் மாநாடு

பட்டைய கணக்காளர் கோவையில் மாநாடு

பட்டைய கணக்காளர் கோவையில் மாநாடு


ADDED : ஆக 22, 2011 12:47 AM

Google News

ADDED : ஆக 22, 2011 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ''பட்டைய கணக்காளர்கள் (ஆடிட்டர்கள்), 'ஆடிட்டிங் கமிட்டி' உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்டோரின் குணநலன்கள் மற்றும் பின்புலம் குறித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும்'' என்று, முன்னணி இந்திய நிறுவனங்கள் பலவற்றுக்கு ஆடிட்டராக உள்ள அனேஜா அசோசியேட்ஸ் நரரேந்திர குமார் அனேஜா பேசினார்.



இந்திய பட்டய கணக்காளர்களின் 43வது மண்டல மாநாடு, கோவை கொடீசியா வளாகத்தில் நடந்தது.

மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று, 'பட்டைய கணக்காளர் தொழிலில் நன்னெறிக் கோட்பாடுகள்' எனும் தலைப்பில், ஆனைகட்டி அர்ஷ வித்ய குருகுலத்தின் சுவாமினி பிரம்ம லீலானந்தா பேசினார். 'சிறந்த தணிக்கைக்கான பத்து நுட்பங்கள்' எனும் தலைப்பில் நரேந்திர குமார் அனேஜா பேசிய போது, பட்டைய கணக்காளர்கள், 'ஆடிட்டிங் கமிட்டி' உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்டோரின் குணநலன்கள் மற்றும் பின்புலம் குறித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆடிட்டிங் கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தான் விரும்பும் திசையில் குழுவை வழிநடத்த விரும்புவர்; அத்தகைய சூழலைக் கையாள அவர்களின் குணநலன்கள் மற்றும் பின்புலம் குறித்த புரிதல் உதவியாக இருக்கும்' என்றார்.



ஆடிட்டர் வேத்ஜெய் பேசுகையில், ''பட்டைய கணக்காளர்களின் மண்டல மாநாடு இந்தியா முழுவதும் நடந்த போதிலும், கோவையைப் போன்று வேறு எந்த பகுதியிலும் நடக்கவில்லை. கோவை, 'ஏர் கண்டிசன்' நகரம்; ஆண்டு முழுதும் அற்புத வானிலை நிலவும் இந்த நகரின் சிறப்பான உள்கட்டமைப்புகளும், பார்க்க வேண்டிய இடங்களும் என்னைக் கவர்ந்துள்ளன'' என, கோவையின் சிறப்பு குறித்து சிலாகித்துப் பேசிய இவர், இந்தியாவில் வரி விதிக்கும் முறை துவங்கி நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆன நிலையிலும், இதன் அவசியம் குறித்து புரியாத நிலை நீடிக்கிறது'' என்று குறிப்பிட்டார் மாநாட்டின் நிறைவு விழாவில், தென்னிந்திய பட்டையக் கணக்காளர் சங்க தலைவர் சண்முக சுந்தரம் வரவேற்றார்; அகில இந்தியத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து, பிரிவு வாரியாக, 2010-11ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய கிளைகளுக்கு பரிசளிக்கப்பட்டது. ஆடிட்டர் முரளி நன்றி தெரிவித்தார்.










      Dinamalar
      Follow us