தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு

19


UPDATED : ஜூலை 14, 2026 08:11 AM

ADDED : ஜூலை 14, 2026 08:04 AM

Follow on GoogleFavourite on Google

19

UPDATED : ஜூலை 14, 2026 08:11 AM ADDED : ஜூலை 14, 2026 08:04 AM


19
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்துக்கான டெண்டர் கோரியது தமிழக அரசு.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு, முதல்வர் விஜயின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டத்தின் கீழ், ஜூன் 22 முதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவர்.

வரும் செப்., 17ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாளில், இத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்துக்கான டெண்டர் கோரியது தமிழக அரசு. தலா ஒரு கிராம் எடை கொண்ட 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 மோதிரங்கள் கொள்முதல் செய்வதற்கு இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us