ஆட்டோ கட்டணம்; மகளிர் மேம்பாட்டு நிறுவனம் விளக்கம்
ஆட்டோ கட்டணம்; மகளிர் மேம்பாட்டு நிறுவனம் விளக்கம்
ADDED : ஜூன் 17, 2025 06:19 AM
சென்னை:  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 50 பெண்களுக்கு, மின் ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இதற்கு, 'சார்ஜிங்' செய்வதற்கான வசதியை அரசு ஏற்படுத்தி தராததால், அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆட்டோ வுக்கு தினமும் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாதம் 5,000 ரூபாய் செலுத்தும்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாக பயனாளிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நேற்று அளித்த விளக்கம்:
அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள மின் ஆட்டோ பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களை மேற்கொள்ள, நிதி ஆதாரம் இல்லை. எனவே, அப்பணிகளை மேற்கொள்ள, பயனாளிகளிடம் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் வாயிலாக கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

