உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 26, 2026 11:22 PM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் பாலசுப்பிரமணியம் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஓடும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயித்து, 13 ஆண்டுகளாகி விட்டன. புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் குறித்து, சென்னையில் கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி முத்தரப்பு பேச்சு நடத்தப் பட்டது.
புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து, நாளை நடக்க உள்ள போக்குவரத்து துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வரும் 29ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
