தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 3,000 டவுன் பஸ்களில் தானியங்கி கதவு

3,000 டவுன் பஸ்களில் தானியங்கி கதவு

3,000 டவுன் பஸ்களில் தானியங்கி கதவு


ADDED : நவ 28, 2024 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2024 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சென்னையை தொடர்ந்து, மாவட்டங்களில் இயக்கப்படும், 3,000க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களிலும் தானியங்கி கதவுகள் பொருத்த, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 18,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு, 10,000 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

படிக்கட்டு பயணத்தை முழுமையாக தடுக்கும் வகையில், தானியங்கி கதவுகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 600க்கும் மேற்பட்ட பழைய பஸ்களில், தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன.

அதைத் தொடர்ந்து, விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களில் ஓடும் டவுன் பஸ்களிலும், தானியங்கி கதவுகளை பொருத்த உள்ளோம். அதற்காக, 3,000க்கும் மேற்பட்ட டவுன் பஸ்களை அடையாளம் கண்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us