தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தொழிலக கட்டடங்களுக்கு தானியங்கி அனுமதி: பொறியாளர் சரிபார்ப்பு மட்டும் போதும்

தொழிலக கட்டடங்களுக்கு தானியங்கி அனுமதி: பொறியாளர் சரிபார்ப்பு மட்டும் போதும்

தொழிலக கட்டடங்களுக்கு தானியங்கி அனுமதி: பொறியாளர் சரிபார்ப்பு மட்டும் போதும்


UPDATED : அக் 12, 2026 10:04 PM

ADDED : அக் 12, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 10:04 PM ADDED : அக் 12, 2026 07:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகத்தில், 26,909 சதுரடி வரையிலான தொழிலக கட்டடங்களுக்கு, மூன்றாம் தரப்பு பொறியாளர் சரிபார்ப்பு அடிப்படையில், தானியங்கி முறையில் கட்டட அனுமதி வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகளை விரைவாக முடிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, ஒற்றை சாளர முறை இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் புதிய முயற்சியாக, கட்டட அனுமதி ஆவணங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு அடிப்படையில், கட்டட அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனால், எவ்வித காத்திருப்பும் இன்றி, கட்டட அனுமதி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில், கட்டட அனுமதி வழங்குவதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, மூன்றாம் தரப்பு பொறியாளர் சரிபார்ப்பு அடிப்படையில், தானியங்கி முறையில் கட்டட அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதன்படி, 8,072 சதுரடி வரையிலான குடியிருப்புகள், 3,229 சதுரடி வரையிலான வணிக கட்டடங்கள், 26,909 சதுரடி வரையிலான தொழிலக கட்டடங்களுக்கு, மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கப்படும்.

'சிப்காட், சிட்கோ' தொழில் பேட்டை திட்டங்களில் உள்ள மனைகளில் கட்டப்படும் தொழிலக கட்டடங்களுக்கு மட்டுமே, தற்போது இந்த வசதி அளிக்கப்படுகிறது. இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சிலில் பதிவு செய்த கட்டட வடிவமைப்பாளர், ஒற்றை சாளர முறை இணையதளத்தில் பதிவு செய்த முதல் நிலை பொறியாளர் ஆகியோர், மூன்றாம் தரப்பாக செயல்பட்டு, கட்டட அனுமதி ஆவணங்களை சரி பார்க்கலாம்.

விண்ணப்பதாரரின் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன என்றும், வரைபடம் சரியாக உள்ளது என்றும், அவர் சான்றளித்தால் போதும். 'ஆன்லைன்' முறையில் இது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்து, கட்டணம் செலுத்தியவுடன் கட்டட அனுமதி வழங்கப்படும்.

அதிகாரிகள் தலையீடு இன்றி, இதில் கட்டட அனுமதி கிடைக்கும். ஆவணங்களில் குறைபாடு, கட்டடத்தில் விதிமீறல் இருந்தால், சான்றளித்த மூன்றாம் தரப்பு பொறியாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக ஒற்றை சாளர முறை இணையதளத்தில், புதிய மென்பொருள் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us