ஐ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல் தி.மு.க.,வினர் ஜாமின் ரத்து
ஐ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல் தி.மு.க.,வினர் ஜாமின் ரத்து
ADDED : ஜன 03, 2024 12:55 AM
மதுரை:கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் 2023, மே 25ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தது. அப்போது அதிகாரிகளை தி.மு.க.,வினர் தாக்கினர்.
பாதிக்கப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசில் புகார் அளித்தனர். வழக்கில் தொடர்புடைய 15 பேர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றனர்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், அதிகாரிகளை தாக்கிய நான்கு பேருக்கு, கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என கோரினர்.
இம்மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை மூத்த வழக்கறிஞர், ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதை பதிவு செய்த நீதிபதி, கரூர் மாவட்ட நீதிமன்றம், நால்வருக்கு வழங்கிய ஜாமின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.