ADDED : ஜூலை 30, 2025 11:03 PM
சென்னை:'கிராம உதவியாளர்களை, மாற்று பணிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதம்:
தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கம், தமிழக அரசு கிராம உதவியாளர்கள் சங்கம், தமிழ்நாடு வருவாய்துறை கிராம பணியாளர் சங்க நிர்வாகிகள், 'கிராம உதவியாளர்களுக்கு மாற்று பணிகள் வழங்கக் கூடாது' என, மனு அளித்துள்ளனர்.
'கிராமப் பணி அல்லாத அலுவலகப் பணிகள், ஆய்வு மாளிகை, புத்தகத் திருவிழா என, பிற துறை பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்' என்றும் கோரிக் கை விடுத்துள்ளனர்.
எனவே, கிராம உதவியாளர்களை, மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது குறித்து, கீழ் நிலை அலுவலர்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். இந்த கடிதத்தை பெற்று கொண்டதற்கான ஒப்புகையை உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.