sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அன்புமணியே தலைவர் !: பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

/

அன்புமணியே தலைவர் !: பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

அன்புமணியே தலைவர் !: பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

அன்புமணியே தலைவர் !: பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்

6


UPDATED : ஆக 09, 2025 11:55 PM

ADDED : ஆக 09, 2025 11:46 PM

Google News

UPDATED : ஆக 09, 2025 11:55 PM ADDED : ஆக 09, 2025 11:46 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஆக. 10--- 'பா.ம.க., தலைவராக, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியே தொடர்வார்' என, அக்கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும், ஓராண்டுக்கு பிறகே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை இப்போதுள்ள நிர்வாகிகளே நீடிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுக்குழு மேடையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்காக போடப்பட்ட நாற்காலி, கடைசி வரை காலியாகவே இருந்தது. ராமதாஸ் உடனான மோதல் முடிவுக்கு வராத நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில், மாமல்லபுரத்தில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க., தலைவர் அன்புமணி, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோரின் செயல்பாடுகள் மீது, பா.ம.க., முழு நம்பிக்கை கொண்டுள்ளது

கட்சியின் அமைப்பு விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் 2026ல், சட்டசபை தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும். அதனால், உட்கட்சி தேர்தல் மேலும் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. 2026 ஆகஸ்ட் மாதத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்

அதுவரை, பா.ம.க., தலைவராக அன்புமணி, பொதுச்செயலராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா ஆகியோர் தொடர்வர். இதற்கு, பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது தமிழகத்தில் அனைத்து தரப்பினராலும் வெறுக்கப்படும் கொடுங்கோல் தி.மு.க., அரசை, வரும் சட்டசபை தேர்தலில் வீழ்த்த பா.ம.க., உறுதியேற்கிறது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்தால், பா.ம.க., சார்பில் மக்களை திரட்டி, மிகப்பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெயர் கெட்டு விடும் பொதுக் குழுவில் அன்புமணி பேசியதாவது:

ராமதாஸ் ஒரு தேசிய தலைவர்; சமூக சீர்திருத்தவாதி. எங்களுக்கு அரசியலையும், சமூக நீதியையும் கற்றுக் கொடுத்தவர். ஆனால், இப்போது அவரால் கட்சியை நிர்வகிக்க முடியாத சூழல் இருக்கிறது. சில நேரங்களில் சுவாமிக்கு கொஞ்சம் கோபம் வந்து விடும். அப்போது திருவிழா நடத்துவோம்; காவடி எடுப்போம்.

இதில், பூசாரி தான் இடையில் பிரச்னை செய்வார். ராமதாசை சுற்றியுள்ள சில சுயநலவாதிகள், தீய சக்திகள், குள்ளநரி கூட்டம், பொய்களை சொல்லி சொல்லி அவரை ஏமாற்றுகின்றனர்.

நான் பிடிவாதக்காரன் அல்ல; உறுதியானவன். யாராவது வந்து பேசி சமாதானப்படுத்தினால் சமாதானமாகி விடுவேன்.

பல செய்திகளை என்னால் சொல்ல முடியாது; சொல்லவும் போவதில்லை. ஆனால், செய்ய வேண்டியதை செய்வேன். ராமதாசிடம், 40 முறை பேசி விட்டேன்; நேற்று கூட பேசினேன். நான் பேசினால், காலையில் சரி என்பார்; பின், பூசாரிகள் சொன்ன பின், அடுத்த நாள் இல்லை என்பார். ராமதாசின் மானம், மரியாதை தான் நமக்கு முக்கியம் .

மாம்பழம் சின்னம் ஒருதலைபட்சமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு பதில் சொல்லி கொண்டிருந்தால், ராமதாஸ் பெயர் கெட்டு விடும்.

நிர்வாகிகள் நியமனத்தில் இருவரும் இணைந்து கையெழுத்து போடுவோம் என்பதை, 15 நாட்களுக்கு முன் ஒப்புக் கொண்டார். அப்புறம், 'நான் மட்டுமே நியமிப்பேன்' என்று கூறி விட்டார்.

அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தலைவர் இருக்க முடியாது; நிறுவனர் தான் நிரந்தரம். பொதுக்குழு முடிவு செய்பவர் தான் தலைவர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு மாம்பழம் சின்னத்தை, தேர்தல் கமிஷன் ஒதுக்கிஉள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விரைவில் கூட்டணி தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது; யார் வர வேண்டும் என, பா.ம.க.,வுக்கு இரண்டு இலக்குகள் உள்ளன. வன்னியர்கள், பட்டியலின மக்களின் துரோகி தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விரைவில் அறிவிப்போம். கட்சி நிர்வாகிகளின் விருப்பப் படியே கூட்டணி அமையும். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,



'உருவத்தில் இல்லை உள்ளத்தில் இருக்கிறார்'


பொதுக் குழுவில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்கவில்லை. ஆனாலும், அவருக்காக நாற்காலி போடப்பட்டிருந்தது. அது கடைசி வரை காலியாக வைக்கப்பட்டு இருந்தது.

இதை குறிப்பிட்டு பேசிய அன்புமணி, ''ராமதாஸ் தான் நம் குல தெய்வம். இந்த பொதுக் குழுவில், உருவத்தில் அவர் இல்லாவிட்டாலும், உள்ளத்தில் இருக்கிறார். அவருக்கு பொதுக் குழுவில் நிரந்தர நாற்காலி இருக்கிறது. அவர் எப் போது வேண்டுமானாலும் வரலாம்; வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்றார். பொதுக் குழுவில் 3,000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

'நான் சொல்வதற்கு எதுவும் இல்லை' ராமதாஸ் விரக்தி


'நான் சொல்வதற்கு எதுவும் இல்லை' என, அன்புமணி கூட்டிய பொதுக்குழு பற்றி, ராமதாஸ் ஒரே வரியில் பதில் கூறினார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வரும் 17ல் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு போட்டியாக அன்புமணி நேற்று மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார்.இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து விட்டு வந்த பொதுச்செயலர் முரளி சங்கர் அளித்த பேட்டி: அன்புமணியின் பொதுக்குழுவை நடத்தலாம் என்று நீதிமன்றம் அனுமதி தரவில்லை; தடை என்றும் சொல்லவில்லை. இது அதிகார பிரச்னை என்பதால், உரிமையியல் நீதிமன்றம் சென்று தீர்வு காண வேண்டும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அன்புமணி தலைவராக நீடிக்கலாமா, வேண்டாமா என்ற சர்ச்சை தேவையில்லை. அவர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், வெறும் ஒரு சேர் போட்டு, வெள்ளைத்துண்டு போட்டு காண்பித்து, ராமதாஸ்

வரவில்லை என கூறுவது சரியல்ல.அன்புமணி நேரடியாக தோட்டத்திற்கு வந்து ராமதாசை சந்தித்து, பொதுக்குழு கூட்டம் சம்பந்தமாக பேசியிருக்க வேண்டும். ராமதாசை, அன்புமணி சந்திக்காதது தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். நீதிமன்றத்தில் தீர்ப்பு உத்தரவை வாங்குவதற்கு வழக்கறிஞர் பாலுவும், மற்ற வழக்கறிஞர்களும் காட்டிய அக்கறையை, ராமதாஸ் - அன்புமணி இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க காட்டியிருந்தால், ராமதாஸ் தற்போது ஓய்வில் இருந்திருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.பின், ராமதாஸ் கூறுகையில், ''அன்புமணி கூட்டிய பொதுக்குழு குறித்து, நான் சொல்வதற்கு எதுவும் இல்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us