sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ

/

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ

10


UPDATED : மார் 10, 2026 02:24 PM

ADDED : மார் 10, 2026 12:05 PM

Google News

UPDATED : மார் 10, 2026 02:24 PM ADDED : மார் 10, 2026 12:05 PM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவித்தது பிசிசிஐ.

இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்தது. இந்திய அணி வெற்றிக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 10) டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக வீரர்கள் உள்ளிட்டோரை மீண்டும் ஒருமுறை வாழ்த்துவதோடு, எதிர்காலத்தில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us