தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'ஏசி' அல்லாத 'ஸ்லீப்பர்' பெட்டிகளிலும் இனி படுக்கை விரிப்பு வசதி

 'ஏசி' அல்லாத 'ஸ்லீப்பர்' பெட்டிகளிலும் இனி படுக்கை விரிப்பு வசதி

 'ஏசி' அல்லாத 'ஸ்லீப்பர்' பெட்டிகளிலும் இனி படுக்கை விரிப்பு வசதி


ADDED : நவ 29, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ரயில்வேயில் முதல் முறையாக, 'ஏசி' வசதி இல்லாத, 'ஸ்லீப்பர்' பெட்டி பயணியருக்கும், ஜனவரி 1 முதல் படுக்கை விரிப்பு வசதி வழங்கப்பட உள்ளது.

ரயில்களில் தற்போது 'ஏசி' பெட்டி பயணியருக்கு மட்டுமே படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வசதியை, 'ஸ்லீப்பர்' பெட்டிகளிலும் ஏற்படுத்த, தெற்கு ரயில்வே முன்வந்து உள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:



ரயில்வே கட்டண உயர்வை தவிர, மாற்று வழிகளில் வருவாய் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 'ஏசி' வசதி இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கும் பயணியருக்கு, முதல் முறையாக படுக்கை விரிப்பு வசதி, சென்னை ரயில் கோட்டத்தில் வரும் ஜன., முதல் அறிமுகம் செய்யப்படும்.

இது, ரயில்வேயில் முன்னோடி திட்டம். பயணியர், 'ஆன்லைனில்' டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே இந்த வசதி வேண்டும் என்றால், தேர்வு செய்யலாம். அல்லது ரயிலில் பயணிக்கும்போது, உரிய கட்டணம் செலுத்தி, படுக்கை விரிப்புகளை பெற்று கொள்ளலாம்.

படுக்கை விரிப்பு, தலையணைக்கு, 50 ரூபாய் கட்டணம், தலையணைக்கு மட்டும் 30 ரூபாய், படுக்கை விரிப்பு மட்டும், 20 ரூபாய் என வசூலிக்கப்படும். அதன் வாயிலாக, ஆண்டுக்கு 28.27 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

முதல் கட்டமாக, நீலகிரி, மங்களூரு, மன்னார்குடி, திருச்செந்துார், பாலக்காடு, சிலம்பு, நாகர்கோவில், ஆலப்புழா, திருவனந்தபுரம் உள்பட, 10 ரயில்களில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us