நம்பினால் நம்புங்க ! மேகதாது அணை தமிழகத்திற்கு தான் லாபமாம்! சொல்கிறார் சிவக்குமார்
நம்பினால் நம்புங்க ! மேகதாது அணை தமிழகத்திற்கு தான் லாபமாம்! சொல்கிறார் சிவக்குமார்
UPDATED : செப் 03, 2024 04:47 PM
ADDED : செப் 03, 2024 11:49 AM

சென்னை: ''மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன்'' என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கி வரும் பயோ - சி.என்.ஜி., மையத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று பார்வையிட்டார். அப்போது எரிவாயு உற்பத்தி முறையை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பயன். போதியளவில் மழை பெய்து, உபரி நீர் திறக்கப்பட்டிருப்பதால், கர்நாடக நீர் திறப்பு குறித்து பேச வேண்டியதில்லை. 2 மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்,'' என்றார்.
உதயநிதியுடன் சந்திப்பு
மாலையில் அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து பேசினார் சிவக்குமார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கூட்டணி கட்சி என்பதால் உதயநிதியை சந்தித்தேன். அவருடனான சந்திப்பு நட்புரீதியானது. மேகதாது அணை விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதை மதிப்போம்'' என்றார்.