sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கம்

/

பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஆக 07, 2025 06:40 AM

Google News

ADDED : ஆக 07, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்; பண்டிகை காலத்தை முன்னிட்டு, பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு இடையே வார சிறப்பு ரயில், வரும், 11 முதல், செப்., 15 வரை இயக்கப்பட உள்ளது. திங்கள் இரவு, 7:15க்கு பெங்களூருவில் புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:15க்கு திருவனந்தபுரத்தை அடையும். கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம், வர்க்கலா ஆகிய ஊர்களில் நின்று செல்லும். செவ்வாய் இரவு, 12:05க்கு சேலம், 1:05க்கு ஈரோடு, 1:50க்கு திருப்பூர், 2:58க்கு போத்தனுாரில் நின்று செல்லும்.

மறுமார்க்க ரயில், செவ்வாய் மதியம், 3:15க்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டு, மறுநாள் காலை, 8:30க்கு பெங்களூருவை அடையும். புதன் இரவு, 12:15க்கு போத்தனுார், 1:20க்கு திருப்பூர், 2:05க்கு ஈரோடு, 3:05க்கு சேலத்தில் நின்று செல்லும்.

மேலும் பெங்களூரு - திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில், ஆக., 13, 27, செப்., 3 ஆகிய புதனன்று, பெங்களூருவில் இரவு, 7:25க்கு புறப்பட்டு மறுநாள், திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தை அடையும்.

மறுமார்க்க ரயில் ஆக., 14, 28, செப்., 4 ஆகிய வியாழனன்று, மதியம், 3:15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் புறப்பட்டு, மறுநாள் காலை, 8:30 மணிக்கு பெங்களூருவை அடையும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us