பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி : தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்
பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி : தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : மார் 02, 2024 01:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பெங்களூரில் பிரபல ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டலில் நேற்று மதியம் குண்டுவெடித்தது. அதில், 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இச்சம்பவம் எதிரொலியாக, தமிழகத்திலும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதுடன், சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களையும், அவர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

