UPDATED : அக் 03, 2025 03:16 PM
ADDED : அக் 02, 2025 06:33 PM
கர்நாடகாவின் சிக்கமக தொகுதி இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட்ட போது, உலக ஊடகங்கள் அங்கே அணிவகுத்து வந்திறங்கின. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் புகழ் பெற்ற பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் அங்கு முகாமிட்டனர்.
இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் தேர்தலாக அது சித்தரிக்கப்பட்டது. அந்த தேர்தலில் சிறப்பு அலுவலகம் திறந்து முழுமையான செய்தியா ளர் படையுடன் களம் புகுந்த ஒரே வெகுஜன தமிழ் நாளிதழ் தினமலர். வெகுஜன என்று அடையாளம் காட்ட காரணம், காங்கிரஸ் கட் சியின் அதிகாரபூர்வ நாளிதழாக விளங்கிய நவசக்தியும் தனது சிறப்பு நிருபரை அங்கே அனுப்பி வைத்திருந்தது.
இந்திரா ஓட்டு கேட்டு போகும் இடமெல்லாம் தொடர்ந்து சென்று செய்தி சேகரிக்க ஒரு நிருபர், ஒரு போட்டோகிராபர்; மத்திய ஆளும் கட்சியான ஜனதா வேட்பாளர் வீரேந்திர பாட்டீலை பின்தொடர இருவர்; ஏனைய 25 வேட்பாளர் களையும், தலைவர்களின் பிரசா ரத்தையும் கவர் செய்ய 4 பேர், அலுவலகத்தில் துணை ஆசிரியர், உதவியாளர் என்று பணிகள் நேர்த் தியாக பிரித்து கொடுக்கப்பட்டன.
சிக்கமகளூர் மலைநகரம். கிரா மங்களும் வாக்காளர்களும் மலை களில் விரவி கிடந்தார்கள். ஓட்டு வேட்டை என்பது காட்டில் வேட் டைக்கு போவதை விட கடின மானது. நடராஜா வாகனம் தான் பெஸ்ட். தலைவர்கள் அப்படியே ஜீப்களில் நின்று மெகபோனில் பேசி விட்டு போய்விடுவார்கள். வேட்பாளர்கள் அப்படி கடந்து போக முடியாதே. நூறடி தூரம் ஜீப்பில் சென்றால் 300 அடி தூரம் நடக்க வேண்டும். பத்து வாக்காளர் தான் பார்வையில் படுவார்.அக்கறையா பரிதாபமா தெரி யாது, எல்லா இடத்துக்கும் தன் பின்னாலேயே ஓடி வந்த தினமலர் நிருபரை ஒரு கட்டத்தில் ஜீப்பில் ஏறச் சொன்னார் இந்திரா. அந்த இளைஞனும் சிக்கென ஒட்டிக் கொண்டான். மலை பிரதேசம் என் பதால் இருட்டிய பிறகு பொதுக் கூட்டம் தவிர ஓட்டுவேட்டை நடப்பதில்லை. கேம்ப் ஆபீசுக்கு திரும்பி வந்து, எடுத்த சில குறிப் புகளையும் நினைவில் நின்ற பல காட்சிகளையும் செய்தி வடிவத்தில்
நிருபர்கள் சொல்ல சொல்ல, டெலிபிரின்டரில் ராட்சத வேகத்தில் தட்டச்சு செய்வார் ஆப்பரேட்டர். ஆம், திருச்சி தினமலர் அலுவலகத்துக்கும் சிக்கமகளூர் முகாம் அலுவ லகத்துக்கும் டெலிபிரின்டர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. திருச்சியில் இருந்து அதே நேரத்தில் செய்திகள் திருநெல்வே லிக்கும் சென்று விடும்.எந்த நாளிதழிலும் காணக்கிடைக் காத செய்திகள் சுடச்சுட அச்சாகி மறுநாள் காலையில் வாசகர்களின் கையில் கிடைக்கும். சிக்கமகளூரில் அந்தளவுக்கு விரிவாக செய்தி சேக ரிக்க முடிந்ததால், தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நேர் மையாக கணிப்பது சுலபமாக இருந் தது. 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஓட்டு வரை வித்தியாசத்தில் இந்திரா மாபெரும் வெற்றி பெறுவார் என்று தினமலர் குழு கணித்தது. சர்வே, ஒப்பீனியன் போல், எக்சிட் போல் போன்ற பார்மூலாக்கள் அறிமுகம் ஆகாத காலம் அது. ஓட்டு போட்ட மக்கலிடம் கேட்டபோது, அவர்களும் மாற்றி பேசாமல் உண்மையை வெள் ளந்தியாக சொன்னார்கள்.இறுதியாக, 77,000 ஓட்டு வித் தியாசத்தில் இந்திரா வெற்றி பெற் றார். தினமலர் தேர்தல் செய்திகள், கணிப்புகள் மீது மக்களுக்கு நம் பிக்கையை உறுதி செய்தது அந்த தேர்தல் முடிவு.