கோயில் சுவற்றில் 'பைபிள் வாசகம்' கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு
கோயில் சுவற்றில் 'பைபிள் வாசகம்' கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு
UPDATED : நவ 14, 2024 06:20 AM
ADDED : நவ 14, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் தனி தனி இடங்களில் சிவன், பிள்ளையார், பெருமாள் போன்ற கோயில்கள் அமைந்துஉள்ளன.
இந்த கோயில்களின் சுற்றுச் சுவர்களில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு பைபிள் வாசகங்களை பேப்பர்களில் கையால் எழுதி ஒட்டி சென்றுள்ளனர். மேலும் அதில், சிலைகளை ஒழித்து கட்டுவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
![]() |
கிராமத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதுபோன்று வாசகங்களை எழுதி ஒட்டிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


