உள்ளடக்கத்திற்கு செல்ல

2 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி; செங்கோட்டையன் நம்பிக்கை
2 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி; செங்கோட்டையன் நம்பிக்கை
ADDED : செப் 30, 2026 02:50 PM

அ நிறம் | அளவு
தாராபுரம்: மதுராந்தகம், தாராபுரம் வரலாறு படைக்கும்; இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை அடைவோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தாராபுரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி: கள நிலவரத்தை பொறுத்த வரைக்கும் இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் மாபெரும் வெற்றியை அடைவோம்; தாராபுரமும் மதுராந்தகமும் வரலாறு படைக்கும்.
இந்த இடைத்தேர்தல் இந்திய நாட்டில் வரலாறு படைக்கும் தேர்தலாக அமையும். தமிழக வெற்றிக்கழத்தின் ஆட்சியை மக்கள் பாராட்டுகிறார்கள். மக்கள் வரவேற்கிறார்கள். பார்க்க வேண்டும் என்று அலைகடலென திரண்டு வருகிறார்கள்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
