ADDED : ஆக 08, 2026 06:20 AM

சென்னை: ''சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, ' பயோமெட்ரிக்' வருகைப் பதிவு விரைவில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தே.மு.தி.க., - பிரேம லதா: சட்டசபைக்கு வரும்போது, இன்னும் நோட்டில் தான் கையெழுத்து போடுகிறோம். தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எனவே, கையெழுத்து இல்லாமல், 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு கொண்டு வர வேண்டும்.
தண்ணீர் பிரச்னை அங்கேயும் ஓயவில்லை. இங்கேயும் ஓயவில்லை. இங்கு பாதி பேருக்கு பாட்டிலில், பாதி பேருக்கு டம்ளரில் தண்ணீர் கொடுக்கின்றனர். அனைவருக்கும் சுகாதார மாக பாட்டிலில் தண்ணீர் தர வேண்டும். அதற்கும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தடை போட்டு விட்டார்.
சபாநாயகர் பிரபாகர்: சட்டசபைக்கு வரும் உறுப்பினர்களின் வருகைப் பதிவை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்வதற்கான திட்டம் உள்ளது. விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: தண்ணீர் பாட்டில் கொடுக்க, நான் தடை போடவில்லை. நான் பேசியதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சபாநாயகர் தக்க முடிவெடுக்கலாம்.
இவ்வாறு விவாதம் முடிந்தது.
