ADDED : டிச 25, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில், பறவைகள் கணக்கெடுப்பு, நாளை மறுநாள் துவங்குகிறது.
தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அக்., மாதம் வடகிழக்கு பருவ மழையின்போது, வலசை பறவைகள் வரத் துவங்கும். ஏப்., இறுதி வரை வலசை பறவைகள் இங்கு இருக்கும்.
இதையடுத்து, 2025 - 26ம் ஆண்டுக்கான நீர் நிலை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு, வரும், 27, 28ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு வனக் கோட்டத்திலும், தலா, 25 இடங்களில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
பறவைகள் கணக்கெடுப்பில் அனுபவம் உள்ளவர்கள், தன்னார்வலர்கள், ஆர்வலர்கள், பார்வையாளர்கள், தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

