பிறப்பு, இறப்பு சான்றுக்கான விண்ணப்பம் : தபால் நிலையங்களில் கிடைக்கும்
பிறப்பு, இறப்பு சான்றுக்கான விண்ணப்பம் : தபால் நிலையங்களில் கிடைக்கும்
ADDED : ஆக 24, 2011 12:31 AM
சென்னை : சென்னை மயிலாப்பூர் தலைமை தபால் நிலையத்தில், அரசின் அனைத்து துறை விண்ணப்பப் படிவங்கள் பெறும் வசதி நேற்று துவக்கப்பட்டது.
பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட, அரசு துறை சார்ந்த சேவைகளின் விண்ணப்பங்களை, தபால் நிலையங்களிலேயே பெறலாம் என, தபால் துறை அறிவித்திருந்தது. இதன்படி, சென்னையில் தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட, 20 தலைமை தபால் நிலையங்கள் மற்றும் 12 துணை தபால் நிலையங்களில் நேற்று முதல் இச்சேவை துவங்கப்பட்டது. மயிலாப்பூர் தலைமை தபால் நிலையத்தில், இச்சேவையை சென்னை நகர மண்டல தபால் துறை தலைவர் ராமானுஜன் துவக்கி வைத்தார். பாஸ்போர்ட் விண்ணப்பம், ஆன்-லைன் பதிவு வசதி, வேலைவாய்ப்பு பதிவு, ரேஷன் கார்டு விண்ணப்பம், வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் பெறலாம். ஐந்து ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பெறலாம்.