ADDED : ஜன 26, 2025 04:42 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை மேல் நேற்று பிரியாணி கொண்டு சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைபோலீசார் திருப்பி அனுப்பினர்.
கடந்த மாதம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆடு, சேவலுடன் திருப்பரங்குன்றம் மலை மேல் செல்ல முன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஜன.,18ல் மலை மேல் தர்காவில் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக சில முஸ்லிம் அமைப்பினர் மலையேற முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்தனர்.
சில நாட்களுக்கு முன் திருப்பரங்குன்றத்திற்கு நவாஸ்கனி எம்.பி.,யுடன் வந்தவர்கள் மலை படிக்கட்டுகளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பிளாஸ்டிக், சில்வர் வாளிகளில் பிரியாணியுடன் மலை மேல் செல்ல முயன்றனர்.அவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.