ADDED : ஜூலை 13, 2011 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்டபம் : கடலில் பிடிபடும் நண்டுகள் இறந்துவிடாமல் இருக்க, கடல்நீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனில் விடப்படுகின்றன.
இவற்றிற்கு தற்போது அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு கிலோ 100க்கு கொள்முதல் செய்யப்பட்ட உயிர் நண்டு விலை, தற்போது 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் விலை மேலும் உயரும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். மீனவர் தர்மபுத்திரன் கூறுகையில், உயிர் நண்டு கொள்முதல் செய்யும் கம்பெனிகளும், வியாபாரிகளும் இத்தனை நாட்கள் மீனவர்களை ஏமாற்றி வந்துள்ளனர். அரசு தலையிட்டு மீன்வளத்துறை மூலம் உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

