UPDATED : ஏப் 03, 2025 04:14 AM
ADDED : ஏப் 03, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சட்டசபையில் நேற்று, வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நேரம் முடிந்து விட்டதாகக் கூறி, பேச்சை முடிக்குமாறு துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''சட்டசபையில் அதிகமான ஆண் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பெண் எம்.எல்.ஏ.,க்கள் குறைவாக உள்ளனர். எனவே, பேசிக் கொண்டிருக்கும் பெண் எம்.எல்.ஏ.,வுக்கு கொஞ்சம் சலுகை காட்டக்கூடாதா?''எனக் கேட்டார்.
அதைத் தொடர்ந்து, சரஸ்வதிக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்காக, அமைச்சர் துரைமுருகனுக்கு சரஸ்வதி நன்றி தெரிவித்தார்.

