உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 10, 2026 07:11 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'த.வெ.க., ஆட்சியில், தொடர் மின்வெட்டால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்' என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தில், த.வெ.க., ஆட்சியில், மின்வெட்டு பிரச்னை தொடர்ந்து வருகிறது. திருவள்ளூர் அத்திப்பட்டு, சென்னை கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மோட்டார்கள் இயங்காமல் குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். பொதுமக்கள் இருளில் மூழ்கி, போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
