தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்:இருவர் கைது

பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்:இருவர் கைது

பா.ஜ., மாவட்ட தலைவர் தாக்கப்பட்ட சம்பவம்:இருவர் கைது


ADDED : ஜன 02, 2024 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் மான்டிரோசா பகுதியில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி அங்குள்ள கிறிஸ்துவ சபையில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. இதில், பங்கேற்க வந்தவர்கள் மோகன்ராஜ் வீட்டின் கேட் முன்பு வாகனங்களை சிலர் நிறுத்தியுள்ளனர். மோகன்ராஜின் மகன், தேஜஸ்வி ஆதித்யா, இவரின் சகோதரர் முகேஷ் ஆகியோர் கேட் முன்பு நிறுத்திய வாகனங்களை அப்புறப்படுத்த கோரி தெரிவித்துள்ளனர். அங்கு வந்த சிலர் மோகன்ராஜ் குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். காயமடைந்த மோகன்ராஜ், அவரது சகோதரர் முகேஷ் ஆகியோர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜி1 போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாக்கிய நபர்களை கைது செய்ய கோரி, பா.ஜ., நகர செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் ரோகிணி சந்திப்பில் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேரிங்கிராஸ் பகுதியில், பா.ஜ., மாவட்ட இளைஞர் அணி தலைவர் பிரேம் யோஜன் தலைமையில் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் கூறுகையில், பா.ஜ., வளர்ச்சியை பிடிக்காத மாற்று கட்சியினர் சமீப காலமாக பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். என்னை தாக்கிய நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். என்றார். இன்ஸ்பெக்டர் மீனா பிரியா கூறுகையில், இச்சம்பவத்தில் காந்தள் பகுதியை சேர்ந்த ஜோயில் நித்தீஷ், 23, இவரது சகோதரர், எபினேசர், 21, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us