sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கர்நாடகா வெளியிட்ட மேகதாது அணை அறிவிப்பு: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

/

கர்நாடகா வெளியிட்ட மேகதாது அணை அறிவிப்பு: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்நாடகா வெளியிட்ட மேகதாது அணை அறிவிப்பு: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்நாடகா வெளியிட்ட மேகதாது அணை அறிவிப்பு: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

24


UPDATED : மார் 07, 2026 05:56 PM

ADDED : மார் 06, 2026 02:38 PM

Google News

UPDATED : மார் 07, 2026 05:56 PM ADDED : மார் 06, 2026 02:38 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதாக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை; தமிழக விவசாயிகளின் உயிர்நாடியான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் போவதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தனது நிதிநிலை அறிக்கையில் கூறியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடனான தனது கூட்டணியை திமுக உறுதி செய்த அடுத்த தினமே, கர்நாடக காங்கிரஸ் அரசு இதனை அறிவித்திருப்பது, தனது கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கியிருக்கிறது.

தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக திமுக அரசு நடப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் நலனுக்காக, தமிழகத்தின் உரிமையைப் பலிகடா ஆக்க முடியாது. தமிழக மக்களின் நலனுக்கு திமுக செய்யும் துரோகம் இது.

உடனடியாக, தனது கூட்டணிக் கட்சித் தலைவரான கர்நாடக காங்கிரஸ் முதல்வருடன் பேசி, மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us