sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ., நிர்வாகி பதவி பறிப்பு

/

 விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ., நிர்வாகி பதவி பறிப்பு

 விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ., நிர்வாகி பதவி பறிப்பு

 விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ., நிர்வாகி பதவி பறிப்பு

3


ADDED : மார் 10, 2026 06:18 AM

Google News

ADDED : மார் 10, 2026 06:18 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய, த.வெ.க.,வுக்கு அழைப்பு விடுத்த, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

'தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதுதான், தனது லட்சியம்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறி வருகிறார். இது உண்மையாக இருந்தால், அவர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும்' என, தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

'த.வெ.க., உடன் நாங்கள் பேச்சு நடத்தவில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், பிரசாத் கருத்து அதற்கு எதிர்மறையாக இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத், அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். மேலும், சட்டசபை தேர்தல் பணிக் குழுவில், அவருக்கு அளிக்கப்பட்ட, ஊடகத்துறை பொறுப்பிலிருந்தும், உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என, நேற்று இரவு நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

இதற்கிடையில், இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசைக்கு என்ன தண்டனை எனக் கேட்டு, பிரசாத் ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us