ADDED : அக் 10, 2025 02:37 AM
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமாறு, த.வெ.க., தலைவர் விஜய் தரப்புடன், பா.ஜ., மேலிடம் பேச்சை துவக்கியுள்ளது.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க, கூட்டணிக்குள் புதிய கட்சிகளை சேர்ப்பதில், பா.ஜ., மேலிடம் தீவிரம் காட்டுகிறது. விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் ஏற்கவில்லை. இதற்கிடையே, கரூர் துயர சம்பவத்துக்கு பின், தனித்து போட்டி என்ற முடிவை, விஜய் மறுபரிசீலனை செய்கிறார்.
'தனித்து போட்டியிட்டால், தி.மு.க.,வை எதிர்கொள்ள முடியாது. விஜய்க்கு கூட்டம் வரும். அதனால் பலன் இருக்காது. தி.மு.க.,வை, தனித்து எதிர்கொள்வது த.வெ.க.,வால் இயலாத காரியம்' என விஜயின் உறவினர்களிடமும், நெருக்கமானவர்களிடமும் பா.ஜ., மேலிட நிர்வாகிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.