ADDED : அக் 05, 2025 01:43 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், மாநிலம் முழுதும் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதன் துவக்க விழா, மதுரையில் வரும், 12ம் தேதி நடக்கிறது. அதில் பங்கேற்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, பா.ஜ., அழைப்பு விடுக்க உள்ளது.
தமிழக பா.ஜ., மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் கூட்டம், சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. நாகேந்திரனின் யாத்திரை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
மதுரையில் வரும், 12ம் தேதி, நாகேந்திரன் யாத்திரை துவக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில், பங்கேற்குமாறு, பழனிசாமிக்கு அழைப்பு விடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், யாத்திரையின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தி, பா.ஜ.,வை பலப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.